எம்மை பற்றி

குர்ஆன் சுன்னாஹ் ஒளியில் மார்க்கத்தை மக்களுக்கு எத்திவைக்க வேண்டும் எனும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட தளம் இது. எனவே தான் இந்த தளத்திற்கு தூயவழி எனப் (www.thuuyavali.com) எனும் பெயரை வைத்துள்ளோம். இன்று எமது சமூகத்தைப் பொறுத்த வரை பல மூடப்பழக்க வழக்கங்களும் சடங்கு சம்பிரதாயங்களும் அனாச்சாரங்களும் நிறைந்திருப்பதை நாம் எம் கண்முன்னே காணமுடிகிறது. கண்மணி நாயகம் ரஸூலே கரீம் முஹம்மத் (ஸல்) அவர்கள் இந்த சமூகத்திற்கு எதை தடை செய்ய வந்தார்களோ அதையே இன்று இஸ்லாத்தின் பெயரால் மக்கள் செய்து வருவதுதான் வேதனை தரும் விடயமாகும். இதற்கு முக்கிய காரணம் இன்று எம்மத்தியில் வாழும் அநேக முஸ்லிம்களுக்கு குர்ஆன் தெரியாது ஹதீஸ் தெரியாது. இதில் வேதனை தரும் விடயம் என்னவென்றால் பலருக்கு குர்ஆன் ஓதத் தெரியாது. புகாரி முஸ்லிம் போன்ற கிரந்தங்களை அவர்கள் கன்னல் கூட கண்டது கிடையாது. இந்த நிலையை மாற்ற வேண்டும். அனைவருக்கும் இஸ்லாமிய அறிவு கிடைக்க வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக் கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கி, அதை அறவழியில் செலவழிக்க அவரைத் தூண்டினான்; இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி அதற்கேற்ப அவர் செயற்பட்டு தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருக்கிறார்." இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் 1486 யாரைப் பார்த்தும் பொறாமை கொள்ளக்கூடாது என்று சொன்ன இஸ்லாம் கல்வியை கற்றுக் கொடுப்பவரைப் பார்த்து பொறாமைப் படச் சொல்கிறது. எதற்காக என்றால் அந்தப் பொறாமையின் மூலம் எமக்கும் கல்வியை கற்க வேண்டும் அதை பிறருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் எனும் ஆசை எம் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும் என்பதே. கல்வியை கற்றுக் கொடுப்பது மட்டுமல்ல அத கற்பதும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். ஒரு நபி மொழியில் நபியவர்கள் கூறுகிறார்கள் "கல்வி முஸ்லிம்களின் தொலைந்த பொருள். எனவே அதை கண்ட இடத்தில் பெற்றுக் கொள்ளுங்கள்." என்று குறிப்பிடுவதன் மூலம் கல்வி கற்பதன் முக்கியத்துவத்தை எமக்கு விளங்கப் படுத்துகிறார்கள். அதுமட்டுமல்ல இன்னுமொரு ஹதீஸில் "கல்வியை கற்பவனாக இரு, அல்லது கற்றுக் கொடுப்பவனாக இரு, அல்லது கற்பவருக்கு உதவி செய்பவனாக இரு, நான்காவது நபராக மட்டும் இருக்காதே" என்று கூறுவதன் மூலம் கல்வியுடன் தொடர்பு இல்லாமல் இருப்பது நபியுடைய கட்டளையை மீறும் செயல் என்றும் புலனாகிறது. கல்வியைக் கற்றுக் கொள்வதன் மூலமே எந்த ஒரு முஸ்லிமும் தன வாழ்நாளை சரியாக திட்டமிட்டு ஒவ்வொரு செயலையும் இஸ்லாமிய வழியில் செயல்பட்டு இம்மை மறுமையில் வெற்றி பெற முடியும். உங்களது அனைத்து செயல்களையும் அல்லாஹ் திருப்தியுறும் வகையில் நடை முறைப்படுத்துவதற்கும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழியை கற்றுணர்ந்து நடப்பதற்கும் இந்த இணையம் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த வலைத்தளத்தின் முக்கிய குறிக்கோள், சமுதாயத்தில் மார்க்கத்தின் பெயரால் நடைபெறும் மார்க்கத்திற்கு முரணான ஷிர்க், பித்அத் போன்ற அநாச்சாரங்களைக் களைவதற்காகவும், மார்க்க அடிப்படை விசயங்களைத் தேவைப்படுவோருக்கு கற்றுக் கொடுப்பதற்காகவும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மார்க்கத்தை எடுத்துக் கூறுவதற்காகவும் இந்த வலைதளத்தில் இடம்பெறும் ஆக்கங்கள் அனைத்தும் மக்கள் பயன் பெறுவதற்காகத்தான். 

எனவே இதில் உள்ள ஆக்கங்கள் அனைத்தும் காப்புரிமை இல்லாதது. இதில் உள்ளவாறே எவ்வித மாற்றமும் இல்லாமல் தங்களுடைய தளங்களிலோ அல்லது வலைப்பூவிலோ வெளியிடலாம்.

அல்லாஹ்வின் சத்திய மார்க்கத்தை அதன் தூய வடிவில் தமிழ் பேசும் மக்களிடையே எடுத்துச் கூற எனக்கும் உங்களுக்கும் அதிக ஆர்வத்தைத் தந்து அதன் மூலம் ஈருலகிலும் அதிக பலன்களை அல்லாஹ் நமக்கு அருள்வானாகவும். ஆமின். 

இஸ்லாமிய கேள்வி பதில்லுக்கு எமது வாட்சப் இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளவும். குர்ஆன் சுன்னாஹ் அடிப்படையில் பதில் வழங்க படும்                                                                                அட்மின் பாரிஸ் 
                                                                           phone no :- +974 33504785
                                                                        whatsapp no :- +974 33504785
                                                                        whatsapp no :- +94 75502 0732
                                                                       Email :- fana.thelivi@gmail.com 
                                                                              farisakptt8@gmail.com 

Post a Comment

Ungal karuthukkal anaithum tntj poal ullathe

எங்களுக்கும் TNTJ க்கும் ரொம்ப தூரம்

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget