சீனடி இலங்கை முஸ்லிம்களுடைய பாரம்பரிய தற்காப்பு கலையா..?

                                       தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...! 
 01. பாரம்பரியத்தின் முக்கியத்துவம் 
ஒரு இனம் இருந்தமைக்கான, அவ்வினம் தனியான அடையாளங்களோடு வாழ்ந்தமைக்கான சான்றாக அவ்வினம் வழிவழியாக பின்பற்றிவரும் பண்பாட்டுக் கோலங்களே ஆகும்.ஒவ்வொரு மனிதனும் தனது இனத்துக்குரிய அடையாளங்களாக இருக்கும் பண்பாட்டு மரபுகளையும் பேணிகொள்வதும் அதனை எதிர்கால சமுகத்திற்க்கு கிடைக்கக் கூடியவகையில் பாதுகாத்து கையளிப்பதும் அவனுக்குரிய கடமையும் பொருப்பும்மாகும்.     

இதன் அடிப்படையில் ஒவ்வொரு கால கட்டத்திலும் வாழ்ந்த சமூகம் தனது சமுகத்தில் இருப்பை உறுதி செய்து கொள்வதற்காக வேண்டியும் அடுத்த சந்ததினர் கடந்தகால தலைமுறை மக்களின் வாழ்க்கை முறமையை  ( குடும்ப அமைப்பு, கலை கலாசாரம், உணவு பழக்க வழக்கம், பைத்தியம், விளையாட்டு ) போன்றவற்றை அறியும் விதத்திலும் அம்முறையை அவர்களுக்கு கையளிக்கும் முகமாகவும் அதனை பாதுகாத்தும் கற்று கொடுத்தும் வந்தனர்.

 ஏனனில் பண்பாட்டு பிரள்வு கலாசார சீரழிவு என்பதனை நம்முன்னோர்கள் நன்கு அறிந்திருந்தனர் மேலும் நம் பண்பாட்டிலிருந்து விட்டுக்கொடுக்கின்ற விடயங்கள் ஒவ்வொன்றும் எம் இனத்தின் இறுப்பை விட்டுக்கொடுக்கின்ற விடயங்களாக அமைவன என்பதால் கலாசார பண்பாட்டு விடயங்களில் மிகவும் உறுதிப்பாடான நிலையில் இருந்தனர்.

                  இவ்வாறு கட்டிக்காக்கப்பட்டு வந்த நமது பாரம்பரியங்கள் கடந்தகால சமுகத்தின் அலட்ச்சியப் போக்கினாலும் கடந்த ஆண்டுகளில் உலக அளவில் ஏற்பட்ட சமுக, பொருளாதார, அரசியல் மாற்றங்களினாலும் நமது சமுகத்தின் பண்பாட்டுக் கூறுகளின் ஏற்பட்டு இருக்கும்  தாக்கங்கள் தீவிரமானவை  கட்டிக்காத்த அடையாளங்களான  குடும்ப ஒழுங்கமைப்பு, அறிவியல் மதிப்பீடுகள், ஆடை அணிகலங்கள், மற்றும் உணவுப்பழக்கங்கள், கலை இலக்கிய போக்குகள் என்று எல்லாவற்றிலும் நவீன வாழ்வின் தாக்கங்கள் மேலோங்குகின்றன இதனால் இன்று இது  போன்ற எமது பண்பாட்டு அடையாளங்கள் பாரியாளவில் மாற்றம்மடைந்து வருகின்றன. மாற்றமடைவது தவறல்ல காரணம் வாழ்க்கைக்கோலங்கள் ஒவ்வொரு காலகட்டத்திற்கேற்ப மாற்றம்மடைந்தே தீரும் ஆனால் அவ்வாறான மாற்றங்கள் ஆரோக்கியமானதாகவும், அடிப்படைத்தன்மையிலுருந்தும் மாறாததாகவும் இருத்தல் வேண்டும்.
            
பிற நாட்டு நாகரீகங்களின் தாக்கங்கள் நம் பண்பாட்டு நாகரியங்களில் ஆதிக்கம் செலுத்த முயன்றாலும் அதற்கேட்ப  நாம் நவீன வாழ்வின் சகல துறைகளையும் உள்வாங்கி உலக அரங்கில் நமக்கென ஒரு இடத்தை பண்பாடு கொடமல் உறுதி செய்து கொள்ள நாம் போராட வேண்டியுள்ளது. கரணம் மேலேத்தயே நாகரீயங்களின் தாக்கம் செறிந்து காணப்படும் இக்கால கட்டத்தில் நம் முன்னோர்களின் வாழ்வியல் முறைமையை பாதுகாப்பதென்பது மிகவும் கடினமான விடயமாக தான் நிகழ்கால சமூகம் கருதுகின்றது. ஆனாலும் பாதுகாக்க வேண்டிய நிர்பந்தத்திலேயே இருக்கின்றோம்.

                காரணம் முன்னோர்களின் வாழ்க்கை முறைமை என்பது எமது பூர்வீகம், பூர்வீகம் என்றால் அது எமது பாரம்பரியம், பாரம்பரியம் ஒவ்வொன்றும் அந்த சமுகத்திக்கான வரலாறுகள். எந்தச்சமூகம் தன் வரலாற்றை அறியாமல் பதுகக்காமல் வாழுமே காலப்போக்கில் அந்தச் சமுதாயம் வரலாற்றிலிருந்தே அழிந்துவிடும்.
           ( வரலாறுகலை மறந்தவர்கள் வரலாற்றிலிருந்து அளிக்கப்படுவர் )

  இலங்கை வாழ் மக்களின் வரலாறுகளையும், பாரம்பரியங்களை ஆராயும் போது  ஒவ்வொரு மத சமூக  மக்களுக்கும் தனிப்பட்ட பாரம்பரியங்களும் கலாச்காரங்களும் காணப்படுகின்றன. பாரம்பரியம் என்று கூரும் போது பா.ப மருத்துவம், இடங்கள், கலைகள் என்றல்லாம் விரிந்து சொல்கின்றன. உதாரனம்  

                                        இடம்                              மருத்துவம்                   தற்காப்புக்கல
                       
பௌத்தர்கள்   -      தலதா மாளிகை        -   ஆயுர்வேதம்         -       அங்கம்பொற
முஸ்லீம்         -     கெச்சிமலைப்பள்ளி   -        யுனானி          -              சீனடி
இந்துக்கள்    -   கோணஸ்வரர் கோயில்      -        சித்தா              -      சிலம்பம்

இவற்றுல் இலங்கையை பிறப்பிடமாகவும் தாயகமாகவும் கொண்ட இரு பாரம்பரிய தற்காப்புக்கலைகள் அங்கம்பொற மற்றும் சீனடி என்பது குறிப்பிடத்தக்கது.இதில் சீனடியினை ஒரு ஆய்வாக பார்ப்போம் 

'''சீனடி''' என்றால் இலங்கை முஸ்லீம்கள் தொன்று தொட்டு பாரம்பரியமாக பயிற்சி செய்கின்ற அல்லது பாதுகாத்து வருகின்ற தொன்மையான தற்காப்புக்கலை.
வரலாறு:- 
                      இலங்கை முஸ்லீம்களிடத்தில் தற்போது இக்கலை பரவலாக காணப்பட்டாலும் இதன் தாயகமாக கருதப்படுவது திருகோணமலை மாவட்டத்திலிருக்கும் கிண்ணியா பிரதேசமும்,களுத்துறை மாவட்டத்திலிருக்கும் பேருவளை பிரதேசமுமாகும். ஆய்வின்போது இரு பிரதேசங்கடளுக்கும் இரு வகையான வரலாறுகள் காணப்படுகின்றன.
கிண்ணியா:-
                            ஒரு காலகட்டத்தில் வியாபாரத்தில் சிறந்து விளங்கிய இலங்கை முஸ்லீம் மக்கள் இலங்கைக்கு வியாபாரத்திற்காக வந்த சீன வர்த்தகர்களிடமிருந்து இக்கலையை கற்றனர். அதாவது இலங்கைக்கு வந்த சீன வர்த்தகர்கள் திருகோணமலை துறைமுகத்தை அண்மித்து காணப்பட்ட கிண்ணியாவில் தலத்தை அமைத்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் இவர்களிட ம் வர்த்தகம் செய்த முஸ்லீம் வியாபாரிகளும் கிண்ணியா வாழ் மக்களும் இக்கலையை கற்றனர். இதனாலேயே சீனடி என்று இக்கலை அழைக்கப்படுவதாகவும் சீனர்கள் தலம் அமைத்து வியாபாரத்தை முன்னெடுத்த இடம் இப்பொழுதும் "சீனாபே" என்றே அழைக்கப்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

பேருவளை :-
                            நாடி நரம்புகளை பிடித்து நோய்களை இனம்காண்பதிலும் நாடி நரம்புகளை தாக்கி உடலுறுப்புக்களை கட்டுப்படுத்துவதிலும் "யுனானி" போன்ற ஒருவகை மருத்துவக்கலையில் பிரசித்து பெற்றிருந்த முஸ்லீம்கள் கெச்சி மலையை அண்டி வாழ்ந்துகொண்டிருந்ததாகவும் அதே கால கட்டத்தில் வியாபார நிமித்தம் இலங்கை வந்த அதிகபடியான சீனர்கள் இங்கு தளம் அமைத்து வாழ்ந்ததாகவும் அந்த இடம் "சீனக்குடா" என்று இன்னும் அழைக்கப்படுவதாகவும் இச்சீனர்கள் மாணிக்க வியாபாரத்தில் முன்னெனியில் இருந்த இலங்கை முஸ்லீம் வர்த்தகர்களுக்கு இடையுறு செய்து மாணிக்க வர்த்தகத்தில் அவர்களது ஆதிக்கத்தை செலுத்த முற்பட்ட போது சீனர்களின் நாடி நரம்புகளைத்தாக்கி அவர்களின் அட்டகாசத்தை அக்கால முஸ்லீம் மக்கள் அடக்கியதாகவும் சீனர்களையே இக்கலையினால் தாக்கி அடக்கியதால்(அக்கால சீனர்கள் சண்டைக்கலையில் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தனர் சீனர்கள் சண்டைக்கலையில் பிரசித்தி பெற்றிருந்தமையினாலேயே அவர்கள் வியாபாரத்தில் ஆதிக்கம் செலுத்த முற்பட்டனர்)  அவ்வாறான சீனருக்கே அடித்ததால் இக்கலை "சீனருக்கே அடி" என்று செல்லமாகவும் பெருமையாகவும் பேச்சு வழக்கில் அழைக்கப்பட்டட இக்கலை காலப்போக்கில் "சீனடி" என்று திரிபடைந்து அழைக்கப்படுவதாக வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன.

     சீனடி கலைஞர்களின் தாக்குதல் முறைமைகள் அல்லது யுக்திகள்

இது ஒரு பாரம்பரிய தற்காப்புக்கலை பல தசாப்தங்களுக்கு முன் வாழ்ந்த நம்முன்னோர்கள் பிரயோகித்த யுக்திகள் ஆனால் தற்போது எவ்வளவோ தற்காப்புக்கலைகள் வளர்ச்சி பெற்றிருக்கின்றன ஆனாலும் நவீன கால தற்காப்புக்கலைகளுக்கு ஈடு கொடுக்கின்ற வகையிலும் ஏன் அதற்கு சவால் விடுக்கும் வகையிலும் சிறந்த யுக்திகளையும் அடிமானங்களையும கொண்டுள்ளது எனலாம் காரணம் ஆரம்ப கால கலைகளே நவீன கால கலைகளுக்கு அடித்தளம்.

* ஒரே சமயத்தில் உடம்பின் மூன்று பாகங்களைத்தாக்குதல்.
* ஒரு மனிதனால் எங்கெல்லாம் தசையை வலுப்பிக்க முடியாதோ     அங்கெல்லாம் தாக்குதல்.
* உடம்பில் காணப்படும் குளிகளிலும் வர்மப்புள்ளிகள் நோக்கியும் தாக்குதல்.
* மூட்டுக்களையும் நரம்புகளையும் அழுத்தி எதிரியை செயழிழக்கச்செய்வர் அல்லது கட்டுப்படுத்துவர்.

(இந்த அடிமுறைகளை கோர்வையாக பயிற்ச்சி செய்வர் அதனை "விளையாட்டு" என்றழைப்பர் இவ்வாறு நாற்பதற்கும் மேற்பட்ட விளையாட்டுக்கள் இருக்கின்றன இதிலும் "ஒருவடிச்சுவடு" "இருவடிச்சுவடு" என பிரிவும் காணப்படுகின்றன.)

முஸ்லீம்களின் தனித்துவக்கலை சீனடி:-

இச்சீனடிக்கலை இலங்கை வாழ் முஸ்லீம்களுக்கே உரித்தான பாரம்பரிய தற்காப்புக்கலை என்பதனை ஆய்விலிருந்து கிடைத்த  ஆதாரங்களுடன் நிறுவுகிறேன்.

* இக்கலை வேறு மொழிபேசும் சமூகத்தால் கற்கப்பட்டிருந்தால் அல்லது கற்பிக்கப்பட்டிருந்தால் எதற்காக தமிழில் சீனடி என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக சிங்கள சகோதரர்களின் பாரம்பரிய தற்காப்புக்கலையான "அங்கம்பொற" அவர்களின் சிங்கள மொழியிலேயே அழைக்கப்டுகிறது காரணம் அக்கலை அந்த சமூகத்தினரால் உருவாக்கப்பட்து அல்லது வளர்க்கப்பட்டமையினால் அதேபோல "சீனடி" என்பது தமிழ் வார்த்தை ஆக இது ஒரு தமிழ் பேசும் சமூக மக்களால் வளர்க்கப்பட்டது என நிறுவ முடிகிறது.

* சீனடியின் ஆரம்பப்பீடிகை அல்லது குருத்துவம் "சலாம்வரிசை" என்று அழைக்கப்படுகிறது (பயிற்சி ஆரம்பிப்பதற்கு முன் தன் குருவையும் பயிற்சி செய்யும் இடத்தையும் கன்னியம் செய்யதற்கு இவ்விளையாட்டு செய்யப்படும் அதனை சலாம்வரிசை என்பர்). இக்கலை தமிழ் பேசும் இந்து நண்பர்களால் வளர்க்கப்பட்டிருந்தால் "வணக்கம்" சொல்லியே ஆரம்பம் செய்திருப்பர் ஆக இக்கலை இந்துக்களுக்குரியதல்ல காரணம் முஸ்லீம் மக்களே அடுத்தவர் மீது சலாம் கூறுவர் அதாவது "உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்" என பொருள். ஆக இக்கலை முஸ்லீம்களால் உருவாக்கப்பட்டது அல்லது பாதுகாக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.

* இலங்கையில் நிகழ்காலத்தில் சிங்கள சீனடிக்கலைஞர்களோ அல்லது இந்து சீனடிக்கலைஞர்களோ காணப்படவில்லை மாறாக தமிழ் மொழி பேசும் முஸ்லீம் சீனடிக்கலைஞர்கள்தான் அதிகளவிலும் உள்ளனர் அதிக "கலாபுஸன" விருதுகளையும் பெற்றுள்ளனர்.மேலும் இலங்கை அரசு இலங்கை முஸ்லீம்களின் பாரம்பரிய கலைகளை அழிவிடாமல் பாதுகாப்பதற்கு இவ்வகையான அழிந்து வரும் கலைகளை பாதுகாக்க முஸ்லீம் கலாசார நிலையங்களில் இக்கலையை கற்பிக்க அனுமதி வழங்கியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலே குறிப்பிட்ட ஆதாரங்கள் அனைத்தும் இச் சீனடிக்கலை இலங்கை முஸ்லீம்களின் பாரம்பரிய தற்காப்புக்கலை என்பதை நிறுவ போதுமானதாக காணப்படுகிறது.           
    
 
                                                          ஆய்வு ஆசிரியர் :- இ . லெ.மு. நப்ரிஸ்


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget