கடல் எவ்வாறு இரண்டாக பிளந்தது விஞ்ஞான ஆய்வு !!

அல்லாஹ்வின் தூதர் மூஸா கடலை இரண்டாக பிளந்தார் என்று அல் குர்ஆன்  குறிபிடுகின்றது இந்த நிகழ்வை விஞ்ஞான பூர்வமாக அளவீடுகளை கொண்டு ஆய்வுகளை மேற்கொண்ட விஞ்ஞான ஆய்வு நிறுவனமான National Center for Atmospheric Research -NCAR மற்றும் அமெரிக்க பல்கலை கழகமான the University of Colorado ஆகியன இந்த சம்பவம் விஞ்ஞான பூர்வமா சாத்தியமானது என்று தெரிவித்துள்ளது இவற்றை கம்ப்யூட்டர் கிராபிக் மூலம் விளக்கியுள்ளனர்.

இதில் இவர்கள் 12 மணித்தியாலங்கள் 63 மைல்கள் வேகத்தில் வீசும் காற்று இரண்டு மீட்டர் ஆழமுள்ள தண்ணீரை புறம் தள்ளக்கூடியது என்றும் நான்கு மணித்தியாலங்களுக்கு பாதையையும் ஏற்படுத்தும் என்பதை காட்டுகின்றனர் இந்த ஆய்வுக்கு மாற்று கருத்துகள் இன்னும் வெளிவரவில்லை இறைவன் குர்ஆன் சொன்ன சில விசியங்களை இன்றைய மனிதன் பார்கவில்லை ஆதலால் இவர்கள் நம்பவும் மாட்டார்கள் ஆனால் இதை ஆய்வுசெய்யும் விதமாக கண்டுகொல்லலாம். குர்ஆனில் கூறப்பட்ட அனைத்து சம்பவங்களுக்கும் அத்தாச்சியாக இந்த உலகத்தில் பாதுகாப்பாக வைத்தான். மேலும் சில சம்பவங்களை அதைபற்றிய ஆய்வுசெய்பவர் மூலம் நிருபித்து காமிக்கிறான். இன்த சம்பவம் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது.

மூஸா(அலை)அவர்களை பிர்அவுன் கூட்டதினர் சதி செய்வதர்காக பின் தொதர்ந்து சென்றார்கள் அப்போது கடல் ஒரு தடையாக இருந்தது மூஸா(அலை) அவர்களும் அவர்கள் கூட்டத்தாரும் என்ன செய்வது என்று தெறியவில்லை அப்போது அல்லாஹ் சொன்னான் நீங்கள் கடலை உங்கள் தடியை வைத்து அடியுங்கள் என்ற கூற அவ்வாரே செய்தார்கள் பின் கடல் இரண்டாக பிறிந்தது இந்த வழியிலே செல்லலாம் என்று பிர்அவுன் கூட்டத்தார் சென்றார்கள் அவர்களை கடல் மூழ்கடித்தது பின் இறைவன் சொன்னால் பிர்அவுனை நான் இந்த உலகத்திர்கு அத்தாச்சியாக பாதுகாப்பேன் என்ற இன்றலவும் அவனின் உடல் பாதுகாப்பாக தான் இருக்கிறது.இதில் இரண்டு அத்தாச்சிகல் பிர்அவுன் உடல் மற்றும் கடல் இரண்டாக பிறிக்கப்பட்டது.

2:50. மேலும் உங்களுக்காக நாம் கடலைப்பிளந்து, உங்களை நாம் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை அதில் மூழ்கடித்தோம் (என்பதையும் நினைவு கூறுங்கள்). 7:138. நாம் இஸ்ராயீலின் சந்ததியினரைக் கடலைக்கடந்து (அழைத்துச்) சென்றபோது, தங்களுக்குரிய விக்கிரகங்களை ஆராதனை செய்து கொண்டிருந்த ஒரு கூட்டத்தார் அருகே (அவர்கள்) சென்றார்கள். உடனே அவர்கள், “மூஸாவே! அவர்களிடமிருக்கும் கடவுள்களைப் போல் நமக்கும் நீங்கள் ஒரு கடவுளை ஆக்கித்தருவீர்களாக!” என்று வேண்டினர்; “நிச்சயமாக நீங்கள் ஓர் அறிவில்லாத கூட்டத்தாராக இருக்கின்றீர்கள்” என்று மூஸா (அவர்களிடம்) கூறினார். 26:63.

 உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்” என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது; (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது.44:24. “அன்றியும். அக்கடலைப் பிளவுள்ளதாகவே விட்டுச் செல்லும், நிச்சயமாக அவர்கள் (அதில்) மூழ்கடிக்கப்பட வேண்டிய படையினராகவே இருக்கின்றார்கள் (எனக் கூறி” இறைவன் ஃபிர்அவ்னையும் அவன் படையினரையும் மூழ்கடித்தான்).
10:90. மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்: இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.

10:91. “இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய். 10:92. எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” என்று அவனிடம் கூறப்பட்டது.


இதையும் பார்க்க :-
                  * இஸ்லாமிய தாடியின் புதிய விஞ்ஞான ஆய்வு...!
                    * வலீமா புறக்கணிப்பு சரியா...?
                    * இஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்! – Part 3 


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget